Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பகிடிவதையே பல்கலை மாணவனின் தற்கொலைக்கு காரணம்; சி.ஐ.டி தகவல்

பகிடிவதையே பல்கலை மாணவனின் தற்கொலைக்கு காரணம்; சி.ஐ.டி தகவல்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சப்ரகமுவ பல்கலை மாணவன் பகிடிவதை காரணமாக தற்கொலை செய்துகொண்டமை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் சமீபத்தில் பகிடிவதை காரணமாக தற்கொலை செய்துகொண்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற மாணவர் சரித் தில்ஷான் கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி அன்று தற்கொலை செய்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதுவரை நடந்த விசாரணையின் முடிவுகளின்படி, மாணவர் பகிடிவதை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் மனச்சோர்வு அல்லது எந்த மனநோயாலும் பாதிக்கப்படவில்லை என்றும்
குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், பல்கலைக்கழக நிர்வாகத்தின் சில சிரேஷ்ட அதிகாரிகள் பல்கலைக்கழகத்திற்குள் நடந்த பகிடிவதை சம்பவங்களை வெளிவராமல் தடுக்க நடவடிக்கை எடுத்துவந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு இதுவரை, பகிடிவதை தொடர்பான 30க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு பதிவாகியுள்ளதுடன், இதில் சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளை 1997 என்ற துரித மூலம் தெரிவிக்குமாறு பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
செய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!

July 21, 2026
இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு
செய்திகள்

பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு

July 21, 2026
“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்
அரசியல்

“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்

July 21, 2026
டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!
செய்திகள்

டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!

July 21, 2026
மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி
காணொளிகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி

July 21, 2026
Next Post
ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கான ஆதாரம் இல்லை; சர்வதேச அணுசக்தி நிறுவனம்

ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கான ஆதாரம் இல்லை; சர்வதேச அணுசக்தி நிறுவனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு