தற்போதைய நீர்க்கட்டண அதிகரிப்பு தற்காலிகமானது. நிரந்தரமான விலைசூத்திரமொன்று எதிர்வரும் டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படும் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
விலைசூத்திரம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமையும் என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அமைச்சில் நேற்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்
” மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எம்மிடம் உள்ள 324 நீர் உற்பத்தி நிலையங்களில் 2 சதவீதம்தான் சூரிய சக்தியில் (சோலார்) செயற்படுகின்றது. ஏனையவை அனைத்தும் மின்சாரத்தில் தான் இயங்குகின்றன. எனவே, மின் கட்டணம் ஒரு வீதத்தால் அதிகரித்தால்கூட நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.