Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பாறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பில் இரட்டைச் சகோதரிகள் கைது

அம்பாறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பில் இரட்டைச் சகோதரிகள் கைது

1 year ago
in செய்திகள்

அம்பாறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 38 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாயான மனோதர்ஷன் விதுஷா என்ற குடும்பப்பெண் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த பெண்ணின் கழுத்து பகுதியில் காயங்கள் ஏற்படக் கூடிய வகையில் வெட்டப்பட்டு தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை பொதுமக்களின் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட குறித்த சம்பவம் தொடர்பில் பல தரப்பினரும் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில்,

24 நாட்களின் பின்னர் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவில் இணைக்கப்பட்ட உப பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமையிலான அணி குறித்த படுகொலை தொடர்பில் 34 வயதுடைய இரட்டையரான சகோதரிகளை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படுகொலை இடம்பெற்றவேளை மரணமடைந்த குடும்ப பெண்ணின் கணவர் வெளிநாடு ஒன்றில் தொழில் நிமிர்த்தம் தங்கி இருந்ததுடன்,

சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராவின் காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச்செல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
தாய்லாந்து- கம்போடியா இடையே முறுகல் நிலை; எல்லை மூடப்பட்டது

தாய்லாந்து- கம்போடியா இடையே முறுகல் நிலை; எல்லை மூடப்பட்டது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு