Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்

1 year ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் வானிலிருந்து பூ மழைபொழிய பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துடன் நேற்று (02) புதன்கிழமை நடைபெற்றது.

இராமபிரானால் வழிபடப்பட்ட ஆலயம், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஒருங்கே கொண்ட ஆலயம் என பல்வேறு சிறப்புகளை கொண்ட மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக கிரியைகள் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமானது.

கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில் 27ஆம் திகதி தொடக்கம் அடியார்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்று நேற்று முன்தினம் (01) செவ்வாய்க்கிழமை காலை வரையில் அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது பிரதான கும்பத்திற்கு விசேட யாகம் மற்றும் விசேட அலங்கார, வேதபாராயணம், நாட்டியாஞ்சலி நடைபெற்றதை தொடர்ந்து பிரதான கும்பங்கள் உட்பட அனைத்து கும்பங்களும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு இராஜகோபுரம் மற்றும் ஆலயத்தின் கோபுரங்கள் கும்பாபிசேகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு சுயம்புலிங்கமாக மூலமூர்த்தியாகவுள்ள மாமாங்கேஸ்வரருக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

ஆனி உத்தரமும் அமிர்த சித்தயோகமும் கூடிய கன்னி லக்ன சுபமுகூர்த்தவேளையில் இந்த மஹா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

நேற்றைய கும்பாபிஷேகத்தில் இலங்கையின் பலபாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் பங்குகொண்டிருந்தனர்.

இதன்போது வருகை தந்த அடியார்களுக்கு தாகசாந்தி நடவடிக்கைகளும் அன்னதான நடவடிக்கைகளும் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களினால் வழங்கிவைக்கப்பட்டது.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!

September 5, 2026
குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
Next Post
இந்த நாட்டில் இடம்பெற்ற பல மோசமான சம்பவங்களில் பிள்ளையானுக்கு தொடர்பு உண்டு; தேசிய மக்கள் சக்தி கந்தசாமி பிரபு

இந்த நாட்டில் இடம்பெற்ற பல மோசமான சம்பவங்களில் பிள்ளையானுக்கு தொடர்பு உண்டு; தேசிய மக்கள் சக்தி கந்தசாமி பிரபு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு