Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்த நாட்டில் இடம்பெற்ற பல மோசமான சம்பவங்களில் பிள்ளையானுக்கு தொடர்பு உண்டு; தேசிய மக்கள் சக்தி கந்தசாமி பிரபு

இந்த நாட்டில் இடம்பெற்ற பல மோசமான சம்பவங்களில் பிள்ளையானுக்கு தொடர்பு உண்டு; தேசிய மக்கள் சக்தி கந்தசாமி பிரபு

1 year ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

பிள்ளையான் போன்றவர்கள் இந்த நாட்டிலே இடம்பெற்ற பல மோசமான செயல்களில் சம்மந்தப்பட்டிருப்பதாக இன்று விசாரணைகளில் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

எனவே அந்தடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் அது சட்டரீதியாக இடம்பெறும் என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று (02) பழைய கச்சேரி மண்டபத்தில் அபிவிருத்தி குழு தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் இடம்பெற்றது.

இதில் போக்குவரத்து பெருந்தெருக்கள், துறைமுகம் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்கா, கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால், நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரபு, ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா, வைத்தியர் இ.சிறிநாத், இரா.சாணக்கியன் மற்றும் அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளீதரன், மற்றும் திணைக்கள அதிகாரிகள் பிரதேசசபை தவிசாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது அபிவிருத்திகுழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் க. பிரபு இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்ற வகையில் நாட்டில் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம் அதனடிப்படையில் மட்டக்களப்பில் பெருந்தெருக்கல் மற்றும் போக்குவரத்து விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்காவின் அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களில் உள்ள அபிவிருத்தி தொடர்பாகவும் பல திட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் எந்தவோரு செயற்பாடுகளை செயல்படுத்த முடியாது என கூக்குரல் இட்டு திரிந்த எதிர்கட்சியினர் இன்று அடங்கி போய் இருக்கின்றனர்.

இன்று சிறுபோக வேளாண்மை அறுவடை செய்யப்பட்டு வருகின்றது கடந்த காலங்களில் நெல்லுக்கான நிர்ணய விலையை நிர்மானிப்பதற்கு கூட முடியாத கடந்த கால அரசாங்கம் இருந்தது.

ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்ற பின்னர் நெல்லுக்கான நிர்ணய விலையை 120 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், அதனை கொள்வனவு செய்வதற்காக 6 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளோம்.

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பாக நீதி அமைச்சர் பல விடையங்கள் தொடர்பாக கலந்து ஆலோசித்து வருகின்றதுடன், அதனை திருத்துவது தொடர்பாக சட்டத்தரணிகள், சமூக அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்களுடன் கடந்த வாரம் கலந்து உரையாடியுள்ளார் அதனை மறுசீரமைக்க கலந்து ஆலோசித்துள்ளோம்.

பிள்ளையான் போன்றவர்கள் இந்த நாட்டிலே பல மோசமான செயல்களில் சம்மந்தப்பட்டிருப்பதாக இன்று விசாரணைகள் மோற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது அதற்கான விசாரணையில் எந்த முடிவு வருகின்றதோ அந்தடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் அது சட்டரீதியாக இடம்பெறும்.

தேசிய மக்கள் கத்தி மக்களின் நலன்சார்ந்த பணியை முன்னெடுத்துவரும் அரசாங்கம் மக்களின் ஆதரவுடன் நீடித்து பயணிக்கும் என எதிர்கட்சியினருக்கு நாங்கள் சவால் விடுகின்றோம். என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!

September 5, 2026
குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
Next Post
கந்தானையில் துப்பாக்கிச்சூடு; இருவர் காயம்

கந்தானையில் துப்பாக்கிச்சூடு; இருவர் காயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.