டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது அவரை கொல்லும் நோக்கில் விஷம் கலந்த கடிதங்களை அனுப்பிய பெண்ணுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 56 வயதான பாஸ்கல் என்ற பெண்ணிற்கு 252 மாதங்கள் தண்டனை விதித்து நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.
தண்டனைக் காலம் முடிந்த பிறகு அவர் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படுவார்.தண்டனை பெற்ற அவர்
கனடா மற்றும் பிரான்ஸ் குடியு ரிமைகளை கொண்ட பெண்ணாவார்.டொனால்டு டிரம்ப் பெயரில் குறித்த பெண் அனுப்பிய உயிரைக் கொல்லும் கடிதங்கள் வெள்ளை மாளிகைக்கு அனுப்பிவைக்கப்படும் முன்னர் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
2020 செப்ரெம்பர் மாதம் நடந்த இச்சம்பவம் தொடர்பில் பாஸ்கல் தெரிவிக்கையில், “எனது திட்டம் தோல்வியடைந்ததில் வருந்துகிறேன், டொனால்டுடிரம்ப்பை தடுக்க முடியவில்லை.எனது இலக்குகளை அடையஅமைதியான வழிகளைக் கண்டறிய விரும்புகிறேன்” என தெரி வித்திருந்தார்.
கடந்த 2020 இல் பாஸ்கல்கைதான போது, அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி, கத்தி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.விசாரணையில், கனடாவின் கியூபெக்கில் உள்ள தனது குடியிருப்பில் வைத்து விசத்தை தயாரித்ததாக அவர் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.