இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதன்படி, இதுவரை 60 ஆயிரத்து 36 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் அதிகளவான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். குறித்த மாவட்டத்தில் 12,886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், மேல் மாகாணத்தில் சுமார் 30 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,446டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், கடந்த ஜனவரி மாதம் முதல் டெங்கு நோயினால் மொத்தமாக 38 மரணங்களும் பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.