Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாணத்தில் இரவு வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம்

கிழக்கு மாகாணத்தில் இரவு வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும் வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மத்திய மலைப் பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும் அத்துடன் சப்ரகமுவ, மேல்,வடமத்திய , வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கொழும்பு தொடக்கம் காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.

சிலாபம் தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் வீசும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

சிலாபம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான அத்துடன் மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக வாகரை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் வீசும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.5 – 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடும். இதேவேளை இக் கடல் பிராந்தியங்களை அண்மித்த தரைப் பிரதேசத்திற்கு கடல்நீர் உட்புகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஆகையினால் கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்
அரசியல்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்

September 16, 2026
சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!
உலக செய்திகள்

சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

September 16, 2026
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!

September 16, 2026
சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது
செய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
Next Post
சந்தையில் வெற்றிலை மற்றும் பாக்கின் விலை அதிகரிப்பு

சந்தையில் வெற்றிலை மற்றும் பாக்கின் விலை அதிகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.