கடுவலை, வெலிவிட்ட பகுதியில் சமூக ஊடகங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வு ஒன்றில் போதைப்பொருட்களுடன் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருநந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் உட்பட பல சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
22 முதல் 27 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்கள் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.








