பயனர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் வகையிலான ஜெனரேட்டிவ் ஏ.ஐ பாட் அமைப்பை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு திறன் தொழில்நுட்பம் பல துறைகளில் தனது ஆக்டோபஸ் கரங்களை விரிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஏ.ஐ குறித்த பேச்சு அதிகமாகி உள்ளது. அதிலும் பயனர்கள் எழுப்புகின்ற கேள்விகளுக்கு தன்னிடம் உள்ள தரவுகளைக் கொண்டு பதில் தரும் ஜெனரேட்டிவ் ஏஐ பாட்கள், பயனர்கள் உள்ளிடும் டெக்ஸ்டுக்கு ஏற்ப நொடிப் பொழுதில் படம் வரைந்து தரும் ஏஐ பாட்கள் என அது நீள்கிறது.
இந்தச் சூழலில் பயனர்களுக்கு ஒரு பயிற்சியாளரை போல இயங்கும் திறன் கொண்ட ஏஐ டூலை கூகுள் நிறுவனம் அதன் ஏஐ ஆய்வு கூடத்தில் வடிவமைத்து, சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பயனர்களுக்கு வாழ்க்கை சார்ந்த தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த அட்வைஸ்களை கொடுக்கும் திறனை இது கொண்டிருக்குமாம்.
தற்போது பயன்பாட்டில் உள்ள ஏ.ஐ சாட்பாட்கள் நிதி, சட்டம் மற்றும் உடல் நலன் சார்ந்த தகவல்களை வழங்குவது இல்லை. அதை தகர்க்கும் வகையில் இது இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 21 வகையிலான அட்வைஸ்களை இது கொடுக்கும் என தெரிகிறது. அனைத்தும் பயனர் நலன் சார்ந்து இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.