13ஐ காட்டி கிழக்கின் முக்கிய பகுதியை அதானி குழுமத்திற்கு விற்க ஏற்பாடு; சுனில் ஹந்துன்நெத்தி குற்றச்சாட்டு!
அரசாங்கம் பொதுமக்களை தவறாக வழிநடத்தி வருவதாகவும், 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் சாக்குப்போக்கில் திருகோணமலை துறைமுகத்தை அதானி குழுமத்திற்கு ஒப்படைக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
தம்புத்தேகமவில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்-அரசாங்கத்தின் வரி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது.
நாட்டின் மொத்த தேசிய வருமானம் 7 வீதம். அரசாங்கத்திற்கு நாடு 8 பில்லியன் ரூபா கடனாகப் பெற்ற திட்டங்கள். நெடுஞ் சாலைகள், தாமரை கோபுரம், பொருளாதார மையங்கள், விமான நிலையங்கள், மாநாட்டு அரங்குகள், விளையாட்டு மைதானங்கள், துறைமுக நகரங்கள் ஆகியவை மீட்கப்பட்ட நிலத் தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன, ஆனால் இவற்றின் மூலம் வருமானம் இல்லை. இவற்றுக்கு செலவிடப்பட்ட பணம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.குடிமக்கள் இப்போது இந்த அரசாங்க கடன்களுக்கு வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்-என்றார்
அரசாங்கம் பொதுமக்களை தவறாக வழிநடத்தி வருவதாகவும், 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் சாக்குப்போக்கில் திருகோணமலை துறைமுகத்தை அதானி குழுமத்திற்கு ஒப்படைக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
தம்புத்தேகமவில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்-அரசாங்கத்தின் வரி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டின் மொத்த தேசிய வருமானம் 7 வீதம். அரசாங்கத்திற்கு நாடு 8 பில்லியன் ரூபா கடனாகப் பெற்ற திட்டங்கள். நெடுஞ் சாலைகள், தாமரை கோபுரம், பொருளாதார மையங்கள், விமான நிலையங்கள், மாநாட்டு அரங்குகள், விளையாட்டு மைதானங்கள், துறைமுக நகரங்கள் ஆகியவை மீட்கப்பட்ட நிலத் தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன, ஆனால் இவற்றின் மூலம் வருமானம் இல்லை. இவற்றுக்கு செலவிடப்பட்ட பணம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.குடிமக்கள் இப்போது இந்த அரசாங்க கடன்களுக்கு வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்-என்றார்