இலங்கையில் தமிழில் உருவாக்கப்படும் முழுநீளத் திரைப்படங்கள் பல இப்போது வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த சாதகமான சூழலில் ரசிகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நோக்கத்தோடு மாதவன் மஹேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிய ,’சொப்பன சுந்தரி’ திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 25 ஆம் திகதி திரையிடப்படவுள்ளது.,
2017ஆம் ஆண்டில் படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பல சவால்களைத் தாண்டி இவ்வருடம் திரைக்கு வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
கதாசிரியரும் நடிகருமாகிய ஜோயல், ‘சொப்பன சுந்தரி’ படத்துக்கான கதை, திரைக்கதையை எழுதி, ஒரு பிரதான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
கொழும்பு நகரை கதைக்களமாக கொண்டு உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில், இலங்கையின் புகழ்பெற்ற கதாநாயகி நிரஞ்சனி சண்முகராஜா ‘சுந்தரி’ கதாபாத்திரத்திலும், அவருடன் இணைந்து பேர்ழிஜா, கஜானன், நரேஷ், தனுஷ் செல்வநாதன், வருண் துஷ்யந்தன், ரவி ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருப்பதோடு, இயக்குநர் மாதவனும் ஒரு பிரதான பாத்திரமேற்று நடித்திருகிறார்.
ஆரம்பத்தில் தயாரிப்பாளர்களின் முதலீட்டுக்காக காத்திருந்த ‘சொப்பன சுந்தரி’, பின்னர் மாதவன், கஜானன் மற்றும் ஜோயலின் சொந்தத் தயாரிப்பில் 2017ஆம் ஆண்டின் பிற்பகுதியில் படமாக்கப்பட்டது.
சமல் விக்ரமசிங்கவின் ஒளிப்பதிவிலும், மாதவனின் படத்தொகுப்பிலும் உருவாகிய காட்சிகளுக்கு இசையமைத்திருக்கிறார் ஜீவானந்தன் ராம். ஜீவாவின் மெட்டுகளுக்கு வருண் துஷ்யந்தன், ராகுல் ராஜ் மற்றும் சங்கர் வரிகள் எழுதியுள்ளனர்.
இத்தொடரில் இலங்கை சினிமாத்துறையில் பலரது அன்பை வென்ற கலைஞன் அமரர் தர்ஷன் தர்மராஜ் ஒரு பிரதான பாத்திரத்திலும் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரையிடப்படவுள்ள திரையரங்குகளின் விபரங்கள் பின்வருமாறு,
SAVOY 3D – வெள்ளவத்தை
CONCORD -தெஹிவளை
REGAL – தெமட்டகொட
REGAL – யாழ்ப்பாணம்
PVR – கொழும்பு (FROM SEPT 01)
NELSON – திருகோணமலை
GK CINEMAX – கல்முனை
AMUTHA CINEMA – வவுனியா