Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிக்குவிற்கு கைது செய்யும் அதிகாரமா?; மட்டு ஊடகவியலாளர்களை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டு காந்தி பூங்காவில் ஊடகவியலாளர்கள் கண்டனப் போராட்டம்!

பிக்குவிற்கு கைது செய்யும் அதிகாரமா?; மட்டு ஊடகவியலாளர்களை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டு காந்தி பூங்காவில் ஊடகவியலாளர்கள் கண்டனப் போராட்டம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இன்றைய தினம் மயிலத்தமடு பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயும் முகமாக களவிஜயம் மேற்கொண்டிருந்த சர்வமதத் தலைவர்கள், சிவில் அமைப்பினர், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட குழுவினரை அங்கு அத்துமீறிய விவசாய நடவடிகைகளில் ஈடுபட்டு வரும் பெரும்பான்மையினத்தவரால் சுற்றிவளைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவ்வாறு செய்தவர்களுக்கு உடன் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பு ஊடகவியலாளர்களால் இன்று மாலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்காகச் சென்ற பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களையே அங்கு அனுமதியற்ற முறையில் அமையப்பெற்ற விகாரையின் பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழுவினரே தடுத்து வைத்தனர்.

மேற்படி சர்வமதத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மேற்படி மயிலத்தமடு பிரதேசத்தில் பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சனைகளை பார்வையிட்டு அவற்றை கேட்டறிவதற்காக களவிஜயம் மேற்கொண்டு பண்ணையாளர்களுடன் கலந்துரையாடலினை முன்னெடுத்ததன் பின்னர் பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்து மீண்டும் திரும்பி செல்லும்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக காணிகளை பிடிப்பவர்கள் மற்றும் பௌத்த மதகுரு ஒருவரும் இணைந்து அனைவரையும் வரும் வழியில் மறித்து சிறைபிடித்துள்ளனர்.

இவ்விடயம் அறிந்த ஏனைய ஊடகவியாளர்கள் தடுத்து வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தடுப்பில் ஈடுபட்டவர்கள் மீது உடன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தி திடீர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் மட்டக்களப்பின் ஊடகசங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
சட்டத்தை உங்கள் கையில் எடுத்துக் கொள்ளாதீர்கள்; பொது பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை!

சட்டத்தை உங்கள் கையில் எடுத்துக் கொள்ளாதீர்கள்; பொது பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு