ஆகஸ்ட் 22 முதல் 24 வரை BRICS நாடுகளின் 15 வது மாநாடு தென் ஆப்பிரிக்காவில் அந்நாட்டு அதிபர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
மாநாட்டின் இரண்டாம் நாளாகிய நேற்று நடைபெற்ற கலாச்சார நிகழ்வில் வரவேற்பு உரையை நிகழ்த்திய தென் ஆப்பிரிக்கா அதிபர் “நிலவின் தென் துருவத்தில் சந்திர தொகுதியை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் நாடு என்ற வரலாற்றை இந்தியா படைத்துள்ளது, சந்திராயன்-3 திட்டம் வெற்றியடைந்ததற்காக பிரதமர் மோடி அரசு மற்றும் இந்திய மக்கள் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை நாங்கள் வாழ்த்துகிறோம்” என தனது வாழ்த்தை தெரிவித்து இருந்தார்.