Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரபாகரன் பயங்கரவாதியா? முடியுமென்றால் கையை உயர்த்தி கூறுங்கள்!; நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா

பிரபாகரன் பயங்கரவாதியா? முடியுமென்றால் கையை உயர்த்தி கூறுங்கள்!; நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்த நாட்டில் நடந்த கொலைகள் தொடர்பில் தான் ஜெனீவா சென்று முறையிட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (10) நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இல்லாதொழிக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஒரு பயங்கரவாதி என யாராவது கையை உயர்த்திக் கூறுங்கள். யாரும் கையை உயர்த்தவில்லை.

அதேபோல, மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹன விஜேவீர ஒரு பயங்கரவாதி இல்லை என நானும் கூறுவேன்.

ஆளும் கட்சியில் யாரையும் வடக்கு மக்களுக்கு தெரியாது. அமைச்சர் சந்திரசேகர் மற்றும் இளங்குமரன் ஆகியோரையும் எங்களுக்கு தெரியாது. இருந்தாலும் வடக்கு மக்கள் உங்களுக்கு வாக்களித்தமைக்கு காரணம் இருக்கின்றது.

ஒரு காலத்தில் எங்களை போலவே நீங்களும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் செய்தவர்கள். இதனாலேயே நம்மை போன்றவர்கள் என எண்ணி வடக்கு மக்கள் உங்களுக்கு வாக்களித்தனர்.

அத்துடன், இன்று வரை எங்களுக்காக மரணித்த ஒருவரை கடவுள் என நாடாளுமன்றத்தில் கூறிய ஒரே தமிழ் அரசியல்வாதி நான் மட்டுமே.

வடக்கு கிழக்கில் குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் இன்றுவரை எடுக்கப்படவில்லை. யாரும் அதற்காக கைது செய்யப்படவில்லை. ஆனால், நீங்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்தீர்கள்.

நீங்கள் ரணிலை கொன்றாலும் விடுதலைப் புலிகளின் தலைவர் எனக்கு கடவுள் என கூறும் ஒரு தமிழனாக நான் மகிழிச்சியடைவேன்.

ஆனால், வன்முறைகளை நாம் விரும்புவதில்லை. உங்களுடைய கட்சியை சேர்ந்த நால்வர், அரகலய காலத்தில் நாடாளுமன்றத்தை எரிக்குமாறு கூறினார்கள். ஆனால், நீங்கள் இன்று நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்ட வாகனங்களிலேயே பயணிக்கின்றனர்.

நாங்கள் கடவுச்சீட்டு அலுவலகம் கேட்கவில்லை, கிரிக்கட் மைதானம் கேட்கவில்லை. மாறாக தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வையே கேட்டோம். அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பில் நான் ஜெனீவா சென்று முறையிடுவேன். அதன் பின்னர் நாட்டிற்கு வந்தவுடன் என்னை கைது செய்வதாயின் கைது செய்யுங்கள்.

ஆனால், நான் என்றாவது ஒரு நாள் சிங்கள மக்கள் வாழும் ஒரு தொகுதியில் நின்று தேர்தலில் போட்டியிடுவேன். அப்போது உங்கள் கட்சியில் எத்தனை குழந்தைகள் மீதம் இருக்கிறது என்பதை பார்ப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!
காணொளிகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

September 15, 2026
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

September 15, 2026
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!
செய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!

September 15, 2026
மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!
அரசியல்

மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!

September 15, 2026
கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

September 15, 2026
லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!

September 15, 2026
Next Post
வட கிழக்கில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

வட கிழக்கில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு