Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மெக்சிக்கோவில் எரிவாயு கொள்கலன் வெடித்துச் சிதறியதில் 8 பேர் உயிரிழப்பு, 90 பேர் படுகாயம்

மெக்சிக்கோவில் எரிவாயு கொள்கலன் வெடித்துச் சிதறியதில் 8 பேர் உயிரிழப்பு, 90 பேர் படுகாயம்

10 months ago
in உலக செய்திகள், செய்திகள்

மெக்சிக்கோ தலைநகர் மெக்சிக்கோ சிட்டிக்கு அருகிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையில், எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்துச் சிதறியதில், குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 90 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

கட்டுப்பாட்டை இழந்த எரிவாயு கொள்கலன், நெடுஞ்சாலையில் கவிழ்ந்து வெடித்தது.

இந்தத் தீ விபத்தில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சுமார் 28 வாகனங்கள் முழுவதுமாக எரிந்து நாசமாகின. விபத்தில் சிக்கிய 90 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

அவர்களில் பலர் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். விபத்துக் குறித்து மெக்சிகோ சிட்டி மேயர் கிளாரா ப்ருகாடா தெரிவிக்கையில், இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 22 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கியவர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை தீக்காயங்களுடன் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!
செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

July 21, 2026
30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!
செய்திகள்

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

July 21, 2026
செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

July 21, 2026
கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
செய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!

July 21, 2026
இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
Next Post
இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் இரத்து ;சுஜீவ சேனசிங்க அறிவிப்பு

இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் இரத்து ;சுஜீவ சேனசிங்க அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு