இந்தியாவின் முக்கிய சினிமா தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் இலங்கையில் அதிநவீன திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவும் அறிமுக விழா நேற்றுமுன்தினம் 23 இடம்பெற்றது.
இலங்கையின் பொழுதுபோக்கு துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், ஆறு இலங்கை இயக்குநர்கள் இயக்கிய ஆறு திரைப்படங்களை அறிவித்ததன் மூலம் Lyca புரொடக்ஷன்ஸ் இந்த வாரம் தனது இலங்கை நடவடிக்கைகளை ஆரம்பித்தது.
இது 2014 இல் பிரிட்டிஷ் இல் உள்ள இலங்கையை பூர்வீகமாக கொண்ட அல்லிராஜா சுபாஸ்கரனால் நிறுவப்பட்டது. Lyca Group என்பது, தொலைத்தொடர்பு, பொழுதுபோக்கு, பயணம், சுகாதாரம், ஊடகம், தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், சந்தைப்படுத்தல் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றில் 16 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோருக்கு உயர்தர, குறைந்த விலை தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கும் ஒரு பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனமாகும்.
செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட ஆறு திரைப்படங்களை இலங்கை இயக்குனர்களான பிரியந்த கொலம்பகே, அசோக ஹந்தகம, ஜெயந்த சந்திரசிறி, ரஞ்சன் ராமநாயக்க மற்றும் சன்ன பெரேரா ஆகியோர் இயக்கவுள்ளனர். கொலம்பகே இயக்கும் படம் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்காவைப் பற்றியது.
லைகா புரொடக்ஷன்ஸ் இலங்கையின் துணைத் தலைவர் ஜானகி விஜேரத்ன கூறுகையில், லைகா புரொடக்ஷனின் திரைப்பட விநியோக தளத்தைப் பயன்படுத்தி, மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள பார்வையாளர்களுக்கு ஆறு இலங்கைத் திரைப்படங்களைத் திரையிடவுள்ளோம்.
இந்தத் திரைப்படங்களைத் தயாரிப்பதற்கான முதலீடு மற்றும் இலங்கைச் சந்தையின் சிறிய அளவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களை பரந்த பார்வையாளர்களுக்கு வெளியிடுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இந்த வெளிநாட்டு சந்தைகளை கைப்பற்றுவதற்கு, இலங்கையின் திரைப்படத் தயாரிப்பின் தரம் வெகுவாக மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான முதலீடுகளைச் செய்வதற்கு லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேசமயம் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கைத் திரையுலகின் இயக்குநர்கள், நடிகர், நடிகைகள், இந்திய சினிமாவின் பல ஜாம்பவான்கள் என பலர் கலந்து கொண்டிருந்ததுடன் முன்னாள் நடிகரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க மற்றும் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க என்போர் கலந்துகொண்டிருந்ததுடன் இது தொடர்பில் கருத்து தெரிவித்த நடிகர் ரஞ்சன் ராமநாயக்க “ஆரம்பகால சிங்களப் படங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டன. லைக்கா புரொடக்ஷன்ஸ் வசதிகளை இலங்கைக்கு விரிவுபடுத்துவது உள்ளூர் திரைப்படத் துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும். எதிர்காலத்தில் பல புதிய இலங்கைத் திரைப்படங்களை உருவாக்குவோம் என்று நம்புகிறோம்.” என்றார்.