Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆசியக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த இந்திய அணி

ஆசியக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த இந்திய அணி

10 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

ஆசியக்கிண்ணத் தொடரில் நேற்று (14) நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றது.

இந்த போட்டி ஆரம்பித்து நாணய சுழற்சியில் ஈடுபட்ட போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியின் தலைவர்கள் கைகுலுக்கவில்லை. இதற்கான காரணம் இந்திய கிரிக்கெட் சபை மற்றும் இந்திய அரசாங்கம் வீரர்களை கைகுலுக்க வேண்டாம் என அறிவுறுத்தியதாக இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் குறிப்பிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதன்காரணமாக இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல்கள் இருந்தன.

எனினும் இருதரப்பு தொடர்களை தவிர்த்து ஐ.சி.சி மற்றும் ஆசியக்கிண்ணம் போன்ற பொது தொடர்களில் விளையாட இந்திய அரசாங்கம் அனுமதித்திருந்தது.

இந்தநிலையில் நேற்று(14) நடைபெற்ற போட்டி நிறைவடைந்த பின்னர் பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்க தயாராக இருந்த போதும், இந்திய வீரர்கள் கைகலுக்காமல் உடைமாற்றும் அறைக்கு சென்றனர். இதுதொடர்பில் பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் மைக் ஹெஸன் தன்னுடைய கவலையை வெளியிட்டிருந்தார்.

அதேநேரம் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறத்த விடயம் தொடர்பில் பாகிஸ்தான் அணியின் முகாமையாளர் ஒரு முறைப்பாடொன்றையும் போட்டி மத்தியஸ்தரிடம் கையளித்துள்ளார்.

இதேவேளை இந்திய வீரர்கள் கைகலுக்க மறுத்ததன் காரணமாக பாகிஸ்தான் அணியின் தலைவர் சல்மான் அலி ஆகாஹ் போட்டி முடிவடைந்த பின்னர் ஊடக சந்திப்பில் கலந்துக்கொள்வதை தவிர்த்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!
செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

July 21, 2026
30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!
செய்திகள்

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

July 21, 2026
செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

July 21, 2026
கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
செய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!

July 21, 2026
இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
Next Post
கட்சிக்கு எதிராக மற்றும் தீர்மானங்களை மீறி செயற்பட்டவர்கள் தப்ப முடியாது; சுமந்திரன்

கட்சிக்கு எதிராக மற்றும் தீர்மானங்களை மீறி செயற்பட்டவர்கள் தப்ப முடியாது; சுமந்திரன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு