Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கட்சிக்கு எதிராக மற்றும் தீர்மானங்களை மீறி செயற்பட்டவர்கள் தப்ப முடியாது; சுமந்திரன்

கட்சிக்கு எதிராக மற்றும் தீர்மானங்களை மீறி செயற்பட்டவர்கள் தப்ப முடியாது; சுமந்திரன்

10 months ago
in அரசியல், காணொளிகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் கட்சியின் உடைய தீர்மானங்களை மீறி நேரடியாக கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்கள் ஏற்கனவே கட்சியில் இருந்து விலக்கப்பட்டிருக்கின்றனர். அதேவேளை கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள் அனைவருக்கும் எதிராக விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு தப்பியுள்ள சிலர் கட்சியில் இருந்து விலக்கப்படுவார்கள் என தமிழரசு கட்சியின் பிரதி பொதுச் செயலாளரும் முன்னாள் நா.உறுப்பினருமான எம். சுமந்திரன் தெரிவித்தார்

அம்பாறை ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“கட்சியின் ஒழுக்க காற்று நடவடிக்கை தொடர்பாக பேசப்பட்டது. ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்ற தேர்தல் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்கள் சம்மந்தமாக கட்சியின் உடைய தீர்மானங்களை மீறி செயற்பட்டவர்கள் அனைவருக்கும் எதிராக விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நேரடியாக எங்கள் கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்கள் ஏற்கனவே கட்சியில் இருந்து விலக்கப்பட்டிருக்கின்றனர்

அதேவேளை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட சிலர் எங்கள் கவனக்குறைவால் தப்பியுள்ளனர். அவர்களுடைய பெயர்களும் சொல்லப்பட்டுள்ளது. அவர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்.

விளக்கம் கோரி எழுதிய கடிதங்களுக்கு சிலர் பதில் எழுதாமல் இருக்கின்றனர். சிலர் பதில் எழுதி இருக்கின்றனர். ஆகவே பதில் எழுதாதவர்கள் அவர்களுக்கு கொடுப்பதற்கு விளக்கம் எதுவும் இல்லை என நிர்ணயிக்க பட்டிருக்கின்றது. ஆனாலும் அதை அவர்களுக்கு அறிவிக்கின்றோம். அதற்கு மேலதிகமாக விளக்கம் எழுதப்படாவிட்டால் நடவடிக்கை எடுப்போம்.

அதேவேளை விளக்கம் எழுதியவர்கள் தொடர்பாக அவர்களது விளக்கத்தை ஆராய்ந்து அவர்களை கட்சியின் ஒழுக்காற்று முறைமைக்குள் அவர்கள் குற்றம் செய்தவர்களாக இருந்தால் குற்றவாளிகளாக காணப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை மூலம் அவர்களை கண்காணிப்பது அல்லது ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்பதாக இருந்தால் கொடுப்பது என்ற கருத்துக்கள் நிலவி இருக்கின்றன. அது தொடர்பாக ஒவ்வொரு விடையங்களை எடுத்து வெளிப்படுத்துவோம்.

கட்சிக்கு எதிராக செய்யப்பட்டிருக்கின்ற வெவ்வேறு நடவடிக்கை தொடர்பாக பேசப்பட்டது. இதில் ஒரு சிலர் கட்சிக்கு சில முரண்பாடுகள் கொடுத்துள்ளனர். முறையற்ற முறைப்பாடுகளும் வந்திருக்கிறது. அதற்கு பதில் அளிப்பதாக தீர்மானித்திருக்கின்றோம். அது சம்பந்தமாக செயற்படுகின்றவர்கள் குறித்து கட்சி தொடர்ச்சியான நடவடிக்கை எடுக்கும்.

கட்சி நீண்ட கட்டுப்பாட்டுடன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், கட்டு கோப்புடன் கட்சி செயல்பட வேண்டும் என்ற கருத்து அனைவராலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே கட்சியின் கட்டுப்பாடு சம்மந்தமாக மிக தெளிவான அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் கட்சி தீர்மானத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றவர்களுக்கு எதிராக கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என தீர்மானித்துள்ளோம். என அவர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!

July 22, 2026
புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!
செய்திகள்

புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!

July 22, 2026
இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்!
செய்திகள்

இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்!

July 22, 2026
‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!
செய்திகள்

‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!

July 22, 2026
தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!

July 22, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
Next Post
இலங்கையில் இணைய வழியில் தகாத தொழில் நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை

இலங்கையில் இணைய வழியில் தகாத தொழில் நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.