பாதாள உலகக் கோஷ்டிகளை முற்றாக ஒழிப்பதற்கு ஆறுமாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மேல்
மாகாணத்துக்கான சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
நாடாளாவிய ரீதியில் கொள்ளைகள், துப்பாக்கியைப் பயன்படுத்திய கொலைகள் பல மடங்காக அதிகரித்துள்ள நிலையில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து திட்டமிட்ட
குற்றவாளிகள் மற்றும் அவர்களுடன் இணைந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் என தெரிவித்துள்ள தேசபந்து தென்னக்கோன், அடுத்த ஆறு மாதங்களில் பாதள உலகக் கும்பல்களை முற்றாக ஒழிக்கும் நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை கவலை தரும்விதத்தில் அதிகளவு துப்பாக்கி பிரயோகங்களை எதிர்கொண்டுள்ளதாலும் அதிகளவு
உயிரிழப்புகள் இடம்பெறுவதாலும் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடும் சட்டநடவடிக்கைகளை எடுப்பதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த வருடம் 40 பேர் இப்படிக் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் மன்னார் அடம்பனில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர் 46- 53 வயதுடைய இருவரும் மோட்டார்சைக்கிளில் பயணித்துக்
கொண்டிருந்தவேளை இவர்கள் இலக்குவைக்கப்பட்டனர்.
தென்னிலங்கையில் நேற்று இரு வேறு சம்பவங்களில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
முன்னதாக போதைப்பொருள் மற்றும் பாதளஉலக குற்றங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக தேசபந்துதென்னகோன் தலைமையில் பொலிஸ்மாஅதிபர் குழுவொன்றை நியமித்திருந்தார்.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
இதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.
இந்தக் குழுவினர் பாதள உலக குழுவினர், அவர்களின் சகாக்கள் குறித்த விவரங்களைத் திரட்டியுள்ளனர்.
சில குற்றவாளிகள் சிறைகளுக்குள் இருந்தவாறே தங்கள் நடவடிக்கைகளை
முன்னெடுக்கின்றனர்இந்த நிலையில் விசேட நடவடிக்கை அடுத்தவாரம் ஆரம்பமாகும்.