வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணத்திற்கு பழி வாங்க வாக்னர் படை வீரர்களுக்கு கமெண்டர் டெனிஸ் கபுஸ்டின் அழைப்பு விடுத்துள்ளார்.
வாக்னர் கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜன் உட்பட விமானத்தில் பயணம் செய்த 10 பேர் விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ரஷ்ய படைத்தளபதிகள் எதிர்த்து மாஸ்கோ நோக்கி அணிவகுத்து சென்றதற்காகவே அவரை திட்டமிட்டு ரஷ்யா கொன்று விட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இதேவேளை, விமான விபத்து ஏற்பட்ட 24 மணி நேரம் கழித்து வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் குடும்பத்தினருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவாக சண்டையிட்டு வந்த ரஷ்ய கூலிப்படை வீரர்கள், தங்கள் தலைவர் எவ்ஜெனி பிரிகொஜினினின் உயிரிழப்பிற்கு பழிவாங்கும் விதமாக அணிமாறி ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட தயாராகி வருகின்றனர் என கூறப்படுகின்றது.
மேலும் பழிவாங்க வேண்டும் என்றால் நீங்கள் உக்ரைன் பக்கம் அணி மாற வேண்டும் என்றும், மாஸ்கோ நோக்கிய புதிய அணிவகுப்பிற்கு தங்களுடன் வாகனர் வீரர்கள் இணைந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.