கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்ட நிலையில் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய நோயாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இருப்பினும் குறித்த நபர் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தாரா என்பது தொடர்பில் இன்றையதினம் விசாரணை நடத்தப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
அதுவரை குறித்த மருந்து நோயாளர்களுக்கு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் வெட்டுக்காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 72வது விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெட்டு காயத்திற்காக நோய் எதிர்ப்பு தடுப்பூசியை செலுத்தியதன் பின்னரே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.