சவுதி அரேபியாவின் கல்விதரத்தை உயர்த்த வேண்டுமெனில், கடுமையான விதிகளை உருவாக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், பாடசாலைக்கு வராமல் இருக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்க சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சவுதி அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், ஒரு மாணவர் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை எடுத்தால் முதல் எச்சரிக்கையும் 5 நாட்கள் விடுமுறை எடுத்தால் 2-வது எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு பெற்றோருக்கு தெரியப்படுத்தப்படும்.
10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 3-வது எச்சரிக்கை அளித்து பெற்றோர் வரவழைத்து உறுதி மொழி பெறப்படும். தொடர்ச்சியாக 15 நாட்கள் வரவில்லையென்றால் அந்த மாணவர் வேறு பாடசாலைக்கு மாற்றப்படுவார்.
தொடர்ச்சியாக 20 நாட்கள் பாடசாலைக்கு வரவில்லை என்றால், அம்மாணவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்தப்படும், பதில் திருப்பதியில்லையெனில் பெற்றோர் மீது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதியப்பட்டு உரிய நீதிமன்றத்தின் மூலம் சிறை தண்டனை விதிக்கப்படும்.
இந்த புதிய உத்தரவு வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அரசு பிறப்பித்த உத்தரவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.