Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்குப் பல்கலைக்கழக இந்துநாகரிகத் துறைத் தலைவர் கலாநிதி நா.வாமன் பேராசிரியராக பதவி உயர்வு

கிழக்குப் பல்கலைக்கழக இந்துநாகரிகத் துறைத் தலைவர் கலாநிதி நா.வாமன் பேராசிரியராக பதவி உயர்வு

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத் துறையின் தலைவராகப் பணியாற்றிவரும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நா.வாமன் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். 27.09.2025 அன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் இப்பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய, திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த கிழக்குப் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைத் தலைவர் கலாநிதி நா.வாமன் அவர்களின் விண்ணப்ப மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் 27.09.2025 ஆம் திகதி இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே கலாநிதி நா.வாமன் இந்துநாகரிகப் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, புன்னைச்சோலையைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் நா.வாமன், தனது பாடசாலைக் கல்வியை மட்/ அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்யாலயத்திலும் மட்;ஃ இந்துக் கல்லூரியிலும் பெற்றுக்கொண்டார். பின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத்தை சிறப்புக் கற்கையாக மேற்கொண்டு (B.A(Hons) முதலாம் வகுப்பில் சித்தியடைந்தார்.

தொடர்ந்து, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் பட்டப்பின் டிப்ளோமாக் கற்கையினையும் (PGD in Philosophy), மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் மற்றும் சமயத்தில் முதுகலைமாணிப் பட்டத்தினையும் (M.A in Philosophy and Religion), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத்தில் முதுதத்துவமாணிப் பட்டத்தினையும் (MPhil in Hindu Civilization), பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத்தில் கலாநிதிப் பட்டத்தினையும் (PhD in Hindu Civilization) பெற்றுக்கொண்டார்.

கிழக்குப் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறையில் தற்காலிக உதவி விரிவுரையாளராகவும் (2009-2011) பின் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையில் இந்துப் பண்பாட்டுக்கான தற்காலிக விரிவுரையாளராகவும் (2012-2014) பணியாற்றி 2014 முதல் கிழக்குப் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறையில் நிரந்தர விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் நா.வாமன் அவர்கள் பல்கலைக்கழக கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அப்பால், இலங்கை அரச நிறுவனங்கள் பலவற்றில் வளவாளராகவும் ஆலோசகராகவும் செயற்பட்டுக் கொண்டிருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து
செய்திகள்

மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

July 22, 2026
Next Post
நெடுந்தீவு அருகே அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு அருகே அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.