மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு பிரதேசத்தில் ஐஸ் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வியாபாரிகளை நேற்று (27) பிற்பகல் சுற்றிவளைத்து மடக்கி பிடித்து இருவரை கைது செய்யத போது ஒருவர் ஐஸ் போதை பொருளை வாயில் போட்டு விழுங்கிய தையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான இன்று (27) பிற்பகல் பொலிஸார் பாலமீன்மடு பிரதேசத்தில் வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன் போது வியாபாரத்துக்காக ஐஸ் போதை பொருளை எடுத்து வந்த 31 வயது மற்றும் 19 வயதுடைய இருவரையும் பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்ததுடன் 10 மில்லி கிராம், 15 மில்லிக்கிராம் போதை பொருளை மீட்டனர்.
இதில் 19 வயது உடையவர் பொலிஸாரை கண்டு ஜஸ்போதை பொருளை வாயில் போட்டு விழுங்கியதையடுத்து அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் கைது செய்யப்படட்ட அடுத்தவரை விசாரணையின் பின்னர் இன்று (28) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.