கனடாவின் ஒட்டாவாவில் கடந்த 2024ஆம் ஆண்டு இலங்கைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேரைக் கொலை செய்த சம்பவத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கையைச் சேர்ந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தண்டனையில் எவ்வித தளர்வை பெறுவதற்கோ அல்லது விடுதலை பெறுவதற்கோ அவர் 25 வருடங்கள் கட்டாயம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

ஃபெப்ரியோ டி சொய்சா எனும் இளைஞர் கனடாவில் கல்வி கற்று வந்த நிலையில் இக் குற்றத்தை செய்தபோது 19 வயதைக் கடந்திருந்தார்.
அவர் மீது நான்கு முதலாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளும் இரண்டு இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளும் ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருந்தன. அவர் அனைத்தையும் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








