இன்று காலை விண்ணில் பாய்கிறது ஆதித்யா L. சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா L1 விண்கலத்துடன் PSLV-C57 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 24 மணிநேர கவுன்டவுன் நேற்று காலை 11.50 மணிக்கு தொடங்குகிறது.
100-120 நாட்கள் பயணித்து L1 சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா L1 . இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலன் இது, சூரியனை ஆய்வு செய்ய, இன்று காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா விண்கலத்தில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. PSLV-XL(C57) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த விண்கலம் ஏவப்பட்ட உள்ளது.
ஆகஸ்ட் 30 , சூரியனை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்ட ஆதித்யா-எல் 1 மிஷன், ஒத்திகை மற்றும் உள் சோதனைகளை வெற்றிகரமாக முடித்ததாக இஸ்ரோ கூறியது. சூரியனின் கொரோனா பகுதியை ஆய்வு செய்வது இதன் முக்கிய நோக்கம் ஆகும்/ சோலார் கொரோனா என்பதுதான் சூரியனின் வெளிப்புற பகுதி ஆகும். இதைத்தான் ஆதித்யா எல் 1 ஆய்வு செய்ய உள்ளது. அதேபோல் சூரிய கதிர்களையும் ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 களமிறங்கி உள்ளது. இந்த ஆதித்யா சூரியனில் இருந்து எல் 1 பாயிண்ட் தூரத்தில் இருக்கும்.