ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியால் தலைவர் 171 படத்தில் தனது சம்பளத்தை 250 கோடியாக உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து தலைவர் 170 பட வேலைகள் வேகமெடுத்துள்ளது. த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஜெயிலரை போல் தனது அடுத்த படமும் மிகப்பெரிய ஹிட்டடிக்க வேண்டும் என்பதில் ரஜினிகாந்த் கவனமாக இருக்கிறார்.
லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள தலைவர் 170 படத்திற்கான லுக் டெஸ்ட்டை நிறைவு செய்து விட்டார் ரஜினி. இந்தப்படத்திற்காக தாடியை எல்லாம் ட்ரிம் செய்து அட்டகாசமான லுக்கிற்கு மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில், நடிகர் அமிதாப் பச்சன், சர்வனாந்த் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயிலர் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு BMW X7 மாடல் காரை பரிசாக வழங்கி உள்ளார். இதன் மதிப்பு 125 கோடி ஆகும். அதே போல இயக்குநர் நெல்சனுக்கு போர்ஷே காரை பரிசாக கொடுத்து கலாநிதி மாறன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
ஜெயிலர் படத்திற்கு ரஜினிகாந்த் 120 கோடியை சம்பளமாக கேட்ட நிலையில், அண்ணாத்த படத்தின் தோல்வியை காரணம் காட்டி சன் பிக்சர்ஸ் நிறுவனம் சம்பளத்தை குறைந்து கொடுத்தது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ரஜினிகாந்த் 171 படத்திற்கு250 கோடியை சம்பளமாக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தலைவர் 171 படத்தின் சம்பளத்தை பேசிக்கொள்ளலாம் என்று, தயாரிப்பு நிறுவனம் கூறியிருந்த நிலையில், ஜெயிலர் படத்தின் கொல மாஸ் வெற்றியால், தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி கேட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ரஜினியின் அதிரடியான சம்பளத்தை கேட்டு தயாரிப்பு நிறுவனம் திக்குமுக்காடி போனதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வராததால், இது வெறும் வதந்தி என்று கோலிவுட் சினிமா வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.