நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் நடத்தப்பட்ட 37 கண் சத்திர சிகிச்சைகளில் 17 பேர் பகுதியளவில் பார்வையிழந்தனர். அத்துடன், இருவர் பூரணபார்வை இழந்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மருத்துவமனையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது கண் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் கனிஷ்க
மேற்குறிப்பிட்ட விடயத்தை குறிப்பிட்டார்.சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வந்தாலும்
உண்மை நிலவரத்தை இங்கு வெளிப்படுத்த வேண்டும். கண்களுக்கு செலுத்தப்பட்ட மருந்துகள் மருத்துவர்களால் தவறாகியதாக நினைக்கின்றனர். இதற்கான பொறுப்பை ஏற்க முடியாது.
அரசின் நலனுக்காக தரம் தாழ்ந்த மருந்துகள் கொள்வனவு செய்யப்படுகின்றன.
அவசர கொள்வனவு விலையில் பல வகையான மருந்துகள் கொண்டு வரப்படுவதாகவும்
பெரும்பாலானவை தரமற்றவை என்றும் குறிப்பிட்டார்.இவற்றில் ப்ரெட்னி சோலோன் கண் மருந்தும்
ஒன்று. இனிமேல் இதுபோன்ற தரம் குறைந்த மருந்துகளை கொண்டு வராமல் பார்த்துக்
கொள்ள வேண்டும். மருத்துவர் என்று சொன்னாலும் சில இடங்களில் மனநோயாளிகள்
போல நடத்தப்படுகிறோம். இந்த நிலைமைக்கு இழுத்திருப்பது அரசாங்கமே. மருத்து வர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படாததால் அவர்கள் அதிகளவில் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
சத்திரசிகிச்சைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எந்த இழப்பீடு நிவாரணமும் வழங்கவில்லை. இழப்
பீடு வழங்கினாலும் அவை எவ்வளவு நாட்களுக்கு போது மானது என்றும் கேள்வி யெழுப்பிய அவர், அப்பாவி
மக்களுக்கு இழப்பீடுக்கு அப்பால்பட்ட ஒன்றை வழங்குவது கட்டாயமாகும் – என்றும் கூறினார்.