ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
எதிர்வரும் 15 ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் கியூபாவின் ஹவானா நகரில் நடைபெற உள்ள ஜி-77 மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.
சுமார் 134 நாடுகளை அங்கத்துவமாக கொண்ட ஜி-77 அமைப்பபானது அதன் உறுப்பு நாடுகளின் பொருளாதார தேவைகளை மேம்படுத்துவதற்காக 1964ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், அணிசேரா கொள்கைகளை கொண்ட அமைப்பாக இந்த அமைப்பு காணப்படுகின்றது.
ஒரு நாட்டின் அபிவிருத்தியின் தற்போதைய சவால்கள் விஞ்ஞானம் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்கள் என்பனவற்றின் செயற்பாடுகள் என்ற துணைப் பொருளில் இம்முறை இந்த மாநாடு நடைபெற உள்ளது.
இதற்கமைய ஜனாதிபதி இந்த மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.