Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விபத்துக்களில் சிறுமி உட்பட 4 பேர் உயிரிழப்பு

விபத்துக்களில் சிறுமி உட்பட 4 பேர் உயிரிழப்பு

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாடு முழுவதும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிறுமி ஒருவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

மில்லனிய – கெனன்துடாவ வீதியின் ரன்மிணிக வளைவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று, எதிர்திசையில் வந்த டிப்பர் வாகனத்தைக் கடந்து செல்ல முற்பட்ட வேளையில், முச்சக்கரவண்டியில் இருந்த குழந்தையொன்று தலையை வெளியே நீட்டியுள்ளது. இதன்போது டிப்பர் வாகனத்தில் குழந்தையின் தலை மோதி விபத்து ஒன்று சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த குழந்தை ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் மில்லனிய பிரதேசத்தைச் சேர்ந்த 4 வயதுடைய சிறுமியாவார்.

விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டி மற்றும் டிப்பர் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மில்லனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல், கிராத்துருக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலகன்வெவ – ஹெபரவ வீதியின் 3 ஆம் கட்டை அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் சறுக்கி விழுந்து, எதிர்திசையில் வந்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கிராத்துருக்கோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பெலகன்வெவ, கிராத்துருக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவராவார்.

விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிராத்துருக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

மொரகஹஹேனவிலிருந்து ஹொரணை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றில் சிக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

ஹொரகஸ் சந்திக்கு அருகில் அவர் பஸ்ஸிலிருந்து இறங்கியுள்ளதுடன், வீதியைக் கடக்க முற்பட்டபோது அதே பஸ்ஸில் சிக்கி இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த அந்த நபர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரணை, கனன்வில பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 70 வயதுடையவராவார்.

விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

கடுவெல – அத்துருகிரிய வீதியின் பஹல போமிரிய பகுதியில் அத்துருகிரிய நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, பாதசாரி கடவையில் வீதியைக் கடந்த பெண் ஒருவருடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பஹல போமிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணாவார்.

விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நவகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!
செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

July 21, 2026
30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!
செய்திகள்

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

July 21, 2026
செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

July 21, 2026
கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
செய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!

July 21, 2026
இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
Next Post
இரு காற்றுச் சுழற்சிகள் இணைவு: வட–கிழக்கில் கனமழை தொடக்கம்; பெரும் புயலாகும் அபாயம் அதிகரிப்பு

இரு காற்றுச் சுழற்சிகள் இணைவு: வட–கிழக்கில் கனமழை தொடக்கம்; பெரும் புயலாகும் அபாயம் அதிகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.