Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளான சம்பவம்; தாயார் கைது – பிரதான சந்தேக நபர் தலைமறைவு

மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளான சம்பவம்; தாயார் கைது – பிரதான சந்தேக நபர் தலைமறைவு

10 months ago
in மட்டு செய்திகள்

கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமான சம்பவம் பதிவாகியுள்ளது.

அம்பாறை மாவட்டம், கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த மாணவியே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையார் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய, இச்சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையகப் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவுப் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாடசாலைக்கு மாணவி இரண்டு மாதங்களாகச் செல்லாதது குறித்து பாடசாலை நிர்வாகம் தாயாரை வினவியபோது, உரிய பதிலின்மை மற்றும் முரண்பட்ட பதில்கள் காரணமாக சந்தேகம் வலுத்தது. இதனையடுத்து, மாணவியின் தந்தை குறித்த விடயத்தை அறிந்து பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.

குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையான குறித்த மாணவி, அவரது தாயின் கள்ளத் தொடர்பில் இருந்த நபரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், இச்சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த மாணவியின் தாயார் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மாணவியின் பெற்றோர் விவாகரத்துப் பெற்ற நிலையில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், கல்முனைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸாரின் வழிகாட்டுதலின் பேரில், தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையில் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
யாழில் இருந்து சென்று மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும்
காணொளிகள்

யாழில் இருந்து சென்று மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும்

September 15, 2026
மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!
காணொளிகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

September 15, 2026
மட்டக்களப்பு களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!
செய்திகள்

மட்டக்களப்பு களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!

September 15, 2026
Next Post
நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை; அரசு அறிவிப்பு

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை; அரசு அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு