Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறியின் வாக்குமூலங்கள்

மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறியின் வாக்குமூலங்கள்

2 months ago
in மட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளிகள் என பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பளித்ததையடுத்து, இருவரும் நேற்று (31) இரவு வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நீதிமன்றத்தின் தீர்ப்பில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக நம்பகமான புலனாய்வு தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், அவற்றைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதன் மூலம் 268 பேரின் உயிரிழப்புக்கும் 586 பேரின் காயங்களுக்கும் அவர்கள் பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவில், தலைமை நீதிபதி பிரியந்த லியனகே மற்றும் நீதிபதி திலகரத்ன பண்டார ஆகியோர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த நிலையில், நீதிபதி விராஜ் வீரசூரிய சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் இருவரையும் விடுவிக்க வேண்டும் என்ற சிறுபான்மைத் தீர்ப்பை வழங்கினார்.

தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன்னர் கருத்து வெளியிட்ட பூஜித் ஜயசுந்தர, எந்தவொரு கொலையையும் வேண்டுமென்றே செய்யவில்லை என்றும், தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும் தனக்கு கருணை காட்டுமாறும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

அதேவேளை, ஹேமசிறி பெர்னாண்டோ தனது தரப்பில் முன்வைத்த விளக்கத்தில், பாதுகாப்பு அமைச்சின் நிர்வாகப் பொறுப்புகளை மட்டுமே மேற்கொண்டதாகவும், புலனாய்வு நடவடிக்கைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தகவல்கள் நேரடியாக அப்போதைய ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும், இந்தத் தீர்ப்பால் மகிழ்ச்சியடைவோர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன மட்டுமே எனவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எனினும், முன்வைக்கப்பட்ட பாதுகாப்பு தரப்பு விளக்கங்களை பரிசீலித்த நீதிமன்றம், கடுமையான கடமைத் தவறுதலே தாக்குதலைத் தடுக்க முடியாமல் போனதற்கான முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டு இருவருக்கும் மரண தண்டனையை விதித்தது.

தொடர்புடையசெய்திகள்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை
செய்திகள்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை

September 16, 2026
மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு
காணொளிகள்

மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு

September 16, 2026
மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்
அரசியல்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்

September 16, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
Next Post
சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!

சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு