இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்துக்காக ஸ்தாபிக்கப்பட்ட இரண்டு பிரதான நிறுவனங்களும் இன்று (நேற்று) முதல், மறைமுகமாக ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுஜன
பெரமுனவின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன தலைமையகத்தில் திங்கட்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.
அதிகாரப் பரவலாக்கத்தின் கட்டமைப்பான மாகாண சபைகள் நாட்டில் செயற்படுகின்ற போதிலும்,
அவை ஜனநாயக விரோதமாக மக்கள் பிரதிநிதிகள் இன்றி காணப்படுவதாகவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட 9 ஆளுநர்கள் மாகாண சபைகளை ஆளுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
அரச அதிகாரிகள் ஊடாக உள்ளூராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்தப்படுவதாகவும் ஜனநாயகத்தை மதிக்கும் எவராலும் இந்த நிலைமை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் குறிப்பிட்டார். குறிப்பிட்ட பிரதேச
மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்ட போதிலும் நேற்றைய தினம் முதல் நிலைமை மாறும் என்றார்.
மக்கள் பிரதிநிதிகள் மூலம் ஆட்சியமைக்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்தும்
கூறி வருவதாகவும் சுட்டிக்காட்டினார். மாகாண சபைகள் இயங்காது என மக்கள் நினைத்தாலும், மாகாண சபைகள் தொடர்ந்து இயங்கினாலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமலேயே ஆட்சி நடத்தப்படும் என்றார்.