பாடசாலை வளாகத்தில் தீப்பரவல் கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியின் பாடசாலை வளாகத்தில் பின்புறத்தில் நேற்றையதினம் (10) விசமிகளால் தீவைக்கப்பட்டதன் காரணமாக பெறுமதி மிக்க பல மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
அதேவேளை பாரிய தீ விபத்தில் இருந்து பாடசாலை பழைய மாணவர்கள் அதிபர், ஆசிரியர், பொலிஸார் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தருமபுர பொலிஸார் தெரிவிக்கையில்,
தொடர்ச்சியாக, பல பகுதிகளை தீ விபத்து இடம்பெற்றுவரும் நிலையில் மக்கள் அநாவசிய தேவை கருதி தீ வைப்பதினை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் பொது இடங்களில் தீ வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தற்பொழுது கடும் வறட்சியும் வெப்பமும் கடும் காற்றும் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் விழிப்பாக செயல்பட வேண்டும் எனவும் தருமபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.