Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பண்டாரவளையில் சிசுவின் சடலம் மீட்பு; பெண்ணொருவர் கைது

பண்டாரவளையில் சிசுவின் சடலம் மீட்பு; பெண்ணொருவர் கைது

3 months ago
in செய்திகள்

பண்டாரவளை – பல்லகெட்டுவ கலப்பிட்டகந்த பகுதியில் நேற்று (23) சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லகெட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

36 வயதுடைய பல்லகெட்டுவ பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (23) மதியம் சுமார் 12. 40 மணியளவில் வீடொன்றுக்கு அருகாமையில் சிசு ஒன்று சடலமாக கிடப்பதாக பல்லகெட்டுவ பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

பின்னர் உடனடியாக ஸ்தானத்துக்கு விரைந்த பல்லகெட்டுவ பொலிஸ் குழுவினர் சிசுவின் சடலத்தை மீட்டதோடு விசாரணைகளை ஆரம்பித்தனர்.

சந்தேகத்துக்கிடமாக சிசு கிடந்த இடத்துக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்த பெண்ணிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது குறித்த சிசு (17/02 ) அன்று தனக்கே பிறந்ததாகவும் பிறக்கும்போதே இறந்து பிறந்ததினால் தனது வீட்டு முற்றத்தில் சிறிய குழி தோண்டி புதைத்ததாகவும், சடலத்தை நாய் வெளியே இழுத்து போட்டுள்ளதாகவும் குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும் சிசுவின் சடலத்தை அவதானித்த நபர் ஒருவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் கணவர் மட்டக்களப்பு பகுதியில் உள்ள வாகனம் கழுவும் இடத்தில் தொழில் செய்து வருவதாகவும், குறித்த பெண் ஆங்காங்கே கூலி வேலை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கு உரிய பெண்ணை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும், சிசுவின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை பல்லகெட்டுவ பொலிஸ் பரிசோதகர் குலரத்ன தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருவதாகவும் பல்லகெட்டுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே கொடூர விபத்து; ஒருவர் பலி, மூவர் காயம்!

எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே கொடூர விபத்து; ஒருவர் பலி, மூவர் காயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு