மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதி மாணவிகள் கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப்போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.
தேசிய பாடசாலை விளையாட்டுப் போட்டிக்கு இணைவாக மாகாண மட்ட போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று(11.09.2023) மகளிருக்கான மாகாண மட்ட எல்லைப் போட்டிகள் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட காயன்குடா கண்ணகி வித்தியாலய மாணவிகள் எல்லைப்போட்டியில் வெற்றிபெற்று மாகாண சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த போட்டியின் இறுதிப்போட்டிக்கு அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய பகுதியான இராணமடு இந்து வித்தியாலயமும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட காயன்குடா கண்ணகி வித்தியாலயமும் தெரிவுசெய்யப்பட்டு நடைபெற்ற போட்டியில் காயன்குடா கண்ணகி வித்தியாலய மாணவிகள் எல்லைப்போட்டியில் வெற்றிபெற்று மாகாண சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து அணி மாணவிகளும் மிகவும் பின்தங்கிய பகுதி மாணவிகளாகயிருந்து இந்த சாதனைகளைப் படைத்துள்ளதாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலய கல்விப்பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மூன்றாம் இடத்தினை மண்டூர் மகா வித்தியாலயம மாணவிகள் பெற்றுக்கொண்டுள்ளனர்.
குறித்த சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலுமிருந்தும் பாடசாலை மாணவிகள் பங்குற்றியமை குறிப்பிடத்தக்கது.