Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செவ்வாய் கிரக திட்டத்திற்கு முன் நிலவில் குடியிருப்புகள் அமைக்கும் எலோன் மஸ்க்

செவ்வாய் கிரக திட்டத்திற்கு முன் நிலவில் குடியிருப்புகள் அமைக்கும் எலோன் மஸ்க்

6 months ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம்

உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் தலைவருமான எலோன் மஸ்க், செவ்வாய் கிரகத்திற்கு முன்னதாக நிலவில் மனிதக் குடியிருப்புகளை உருவாக்கும் தனது புதிய இலக்கை அறிவித்துள்ளார்.

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிலவில் “சுயமாக இயங்கும் நகரம்” ஒன்றை அமைப்பது சாத்தியம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதை விட நிலவிற்குச் செல்வது மிகவும் இலகுவானது மற்றும் விரைவானது என மஸ்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல 6 மாதங்கள் தேவைப்படும் நிலையில், நிலவை வெறும் 2 நாட்களில் சென்றடைய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய்க்கு 26 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே விண்கலங்களை அனுப்ப முடியும். ஆனால் நிலவிற்கு ஒவ்வொரு 10 நாட்களுக்கும் ஒருமுறை விண்கலங்களை அனுப்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நிலவில் உள்ள இயற்கை வளங்களைப் பயன்படுத்தி ஓக்சிஜன், நீர் மற்றும் கட்டுமானப் பொருட்களை அங்கேயே தயாரிப்பதே மஸ்க்கின் பிரதான திட்டமாகும்.

இது “அறிவியல் புனைகதை” போலத் தோன்றினாலும், தத்துவார்த்த ரீதியாகச் சாத்தியமானது என நிபுணர்கள் கருதுகின்றனர்.

பிரிட்டனின் சர்ரே பல்கலைக்கழக விரிவுரையாளர் சுங்வூ லிம் இது குறித்துக் கூறுகையில், நிலவின் மண்ணைப் பயன்படுத்தி வளங்களைத் தயாரிப்பது பூமியில் நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை ஒத்ததுதான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், நிலவின் கடுமையான வெப்பநிலை மற்றும் தூசு நிறைந்த சூழலில் இவை எவ்வாறு செயற்படும் என்பதே பெரும் சவாலாக இருக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 2027 மார்ச் மாதத்தில் நிலவில் ஆளில்லா விண்கலத்தைத் தரையிறக்கத் திட்டமிட்டுள்ளது. நாசாவின் ‘ஆர்டெமிஸ்’ திட்டத்திலும் ஸ்பேஸ்எக்ஸ் முக்கிய பங்கு வகிக்கின்றது.

அத்துடன், விண்வெளியில் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தரவு மையங்களை அமைக்கும் லட்சியத்தையும் மஸ்க் கொண்டுள்ளார்.

நாகரிகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே தனது முதன்மையான முன்னுரிமை எனத் தெரிவித்துள்ள மஸ்க், செவ்வாய் கிரகத்தை அடைவதற்கு நிலவு ஒரு “படிக்கல்லாக” அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

September 5, 2026
மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி
செய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி

September 5, 2026
மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!
செய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
Next Post
மன்னாரில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து வேட்டை

மன்னாரில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து வேட்டை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு