Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
16 இலட்சம் பேருக்கு அடையாள அட்டைக்குப் பதிலாக கடிதம்

16 இலட்சம் பேருக்கு அடையாள அட்டைக்குப் பதிலாக கடிதம்

3 months ago
in செய்திகள்

தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்த 16 இலட்சம் பேர், அடையாள அட்டைக்குப் பதிலாக வழங்கப்பட்ட தற்காலிகக் கடிதத்தை மாத்திரமே வைத்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதாரப் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் 2026-ஆம் ஆண்டுக்காகத் திட்டமிடப்பட்டுள்ள முன்மொழிவுகள் குறித்து ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் நேற்று (25) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்குத் தேவையான பொலிகார்பனேட் அட்டைகளின் தட்டுப்பாடு காரணமாகவே ஆட்பதிவுத் திணைக்களம் அடையாள அட்டைக்குப் பதிலாகக் கடிதமொன்றை விநியோகித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2005-ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்குப் பொலிகார்பனேட் அட்டையில் அச்சிடப்பட்ட அடையாள அட்டைகளை வழங்கும் பணி தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், 2006-ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத அனைவருக்கும் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 1.6 மில்லியன் பேர் அடையாள அட்டைக்குப் பதிலாக வழங்கப்பட்ட கடிதத்தை வைத்துள்ள நிலையில், அதற்காக 5 மில்லியன் பொலிகார்பனேட் அட்டைகளைக் கொள்வனவு செய்வதற்கான கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்குள் முதலாவது தொகுதி அட்டைகளை நாட்டுக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பயன்பாட்டிலுள்ள அடையாள அட்டைக்குப் பதிலாக பயோமெட்ரிக் தரவுகளைக் கொண்ட டிஜிட்டல் அடையாள அட்டையை விநியோகிக்க 2012-ஆம் ஆண்டு முதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் தற்போதைய அரசாங்கம் அதன் முதலாம் ஆண்டிலேயே அந்த வேலைத்திட்டத்தில் முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.டிஜிட்டல் அடையாள அட்டைக்கான கொள்முதல் நடவடிக்கைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்து, இந்த ஆண்டின் மூன்றாவது அல்லது நான்காவது காலாண்டிற்குள் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் மக்கள் அரச அலுவலகங்களுக்கு வருகை தருவதைப் பெருமளவில் குறைத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!
செய்திகள்

நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!

June 6, 2026
டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!
செய்திகள்

டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!

June 6, 2026
ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!
செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!

June 6, 2026
Next Post
கொழும்பில் வரவை விட செலவு அதிகம்; மட்டக்களப்பில் ஒருவரின் மாத செலவுக்கு ரூ16821 தேவை!

கொழும்பில் வரவை விட செலவு அதிகம்; மட்டக்களப்பில் ஒருவரின் மாத செலவுக்கு ரூ16821 தேவை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.