இலங்கையில் கடந்த காலங்களில் இடம் பெற்ற மனித உரிமைகள் மீறல்களை ஏற்றுக் கொள்ளவேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உள்ளது என ஐக்கியநாடுகளின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா அல் நசீவ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 54ஆவது அமர்வு நேற்று ஆரம்பமானவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.தேர்தல்களை நடத்துவதை தாமதிப்பதும் 13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளை மறுசீரமைப்பதும் அரசியலில் பங்கெடுப்பது மற்றும் வாக்காளர்களின் சுதந்திரமான வெளிப்பாடு ஆகியவற்றுக்கான உரிமைகளை மட்டுப்படுத்துகின்றது.
அரசாங்கத்தின் பொருளாதார மீட்சி கொள்கைகள் பொருளாதார சமூக மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான அதன் கடப்பாடுகளால் வழி நடத்தப்படவேண்டும்.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமைகளை மறுப்பது மக்கள் தங்கள் உண்மையான துயரங்களை
வெளிப்படுத்துவதை ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதை தடுக்கும் இதனால் நாட்டில் மேலும் பதற்றம் உருவாகும்.
உண்மையை கண்டறிவது மாத்திரம் போதுமானதல்ல அதனுடன் பொறுப்புக்கூறலுக்கான தெளிவான அர்ப்பணிப் பும் இணைந்திருக்க வேண்டும்.சர்வதேச தற்காலிக சிறப்பு நீதிமன்றங்கள் மூலமும் இதனை முன்னெடுக்கவேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தொடர்பில் சுயாதீன வெளிப்படையான ஒரு பின் தொடர்தல் விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையாளர் தொடர்ச்சியாக இலங்கைக்கு பரிந்துரை செய்துவந்துள்ளார்.இதனை முழுமையான சர்வதேச மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் முன்னெடுக்க வேண்டும் – என்றார்.