Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி இறந்து விட்டார்; அறிவித்தார் டிரம்ப்

ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி இறந்து விட்டார்; அறிவித்தார் டிரம்ப்

3 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை உறுதிப்படுத்தியுள்ள அவர், இது ஈரானிய மக்களுக்கும், ஈரானால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளுக்கும் கிடைத்த நீதி எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அதிநவீன உளவுத்துறை மற்றும் கண்காணிப்பு அமைப்புகளின் உதவியுடன், இஸ்ரேலுடன் இணைந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கமேனியுடன் இருந்த மற்ற தலைவர்களும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC), இராணுவம் மற்றும் காவல்துறையினர் இனி போரிட விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், அவர்கள் ஈரானிய தேசப்பற்றாளர்களுடன் இணைந்து அமைதியான முறையில் நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

“இப்போது இணைந்தால் அவர்களுக்கு மன்னிப்பு (Immunity) வழங்கப்படும், தாமதித்தால் மரணமே பரிசாகக் கிடைக்கும்” என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒரே நாளில் ஈரானின் பல பகுதிகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், மத்திய கிழக்கிலும் உலகிலும் அமைதியை நிலைநாட்டும் நோக்கம் நிறைவேறும் வரை, ஈரானின் இலக்குகள் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்கள் இந்த வாரம் முழுவதும் தடையின்றித் தொடரும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானிய மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுப்பதற்கான மிகச்சிறந்த வாய்ப்பு இதுவெனவும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேலிய தரப்பு நம்புகிறது.

இந்தநிலையில் ஈரானின் அதிகாரப்பூர்வ மற்றும் அரச சார்பு ஊடகங்களான ‘தாஸ்னிம்’ (Tasnim) மற்றும் ‘மெஹ்ர்’ (Mehr) ஆகியவை இந்தச் செய்தியைத் திட்டவட்டமாக மறுத்துள்ளன.

ஒருவேளை கொமேனி கொல்லப்பட்டிருந்தால், நாட்டை வழிநடத்த ஈரானில் ஒரு ‘நிர்வாகக் குழு’ (Leadership Council) ஏற்கனவே தயாராக இருக்கலாம் என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதேசமயம் ஈரான் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில், அந்நாட்டின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானிய புரட்சிகர காவல்படையுடன் (IRGC) தொடர்புடைய ‘பார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனம், கமேனியின் அலுவலகத்திலுள்ள நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர்களின் மரணம் குறித்த செய்திகள் கசிந்துள்ள போதிலும், உச்சத்தலைவர் கமேனியின் நிலை குறித்து ஈரானிய அதிகாரிகள் இதுவரை எவ்வித உத்தியோகபூர்வமான தகவலையும் வெளியிடவில்லை.

Tags: BatticaloaBatticaloaNewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!
செய்திகள்

நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!

June 6, 2026
டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!
செய்திகள்

டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!

June 6, 2026
ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!
செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!

June 6, 2026
பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு
செய்திகள்

பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

June 6, 2026
Next Post
ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டமை உறுதி;  40 நாட்கள் பொதுத் துக்கதினம்

ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டமை உறுதி; 40 நாட்கள் பொதுத் துக்கதினம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.