Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாணவன் மீது பாலியல் துன்புறுத்தல்; அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறை!

மாணவன் மீது பாலியல் துன்புறுத்தல்; அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறை!

3 years ago
in செய்திகள்

பதின்ம வயது மாணவனை பாரதூரமான பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பாடசாலை அதிபருக்கு 7
ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம். எம். எம். மிஹால் தீர்ப்பளித்தார்.

“தனது காவலில் உள்ள மாணவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது பாரதூரமான குற்றமாகும்.
தற்போது அதிகரித்து வரும் இத்தகைய செயல்பாடுகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படுவது அவசியம்.” என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கோடிட்டு காட்டினார்.

2014ஆம் ஆண்டு செப்ரெம்பர் 23ஆம் திகதி மன்னார் பாடசாலையில் கற்ற 10 வயது மாணவன் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்தப்பட்டார். சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மாணவன் கல்வி கற்ற பாடசாலை அதிபரான மன்னார் செல்வநகரை சேர்ந்த விநாயகமூர்த்தி சித்திவிநாயகம் கைது செய்யப்பட்டார்.

மன்னார் நீதிவான் நீதிமன்றில் இடம் பெற்ற சுருக்கமுறையற்ற விசாரணைகளின் பின் சட்ட மா அதிபரினால் மன்னார் மேல் நீதிமன்றில் பாடசாலை அதிபருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம். எம். எம். மிஹால் முன்னிலையில் விளக்கம் இடம்பெற்ற நிலையில் நேற்று வழக்கு தீர்ப்புக்காக நியமிக்கப்பட்டது. எதிரி மீதான குற்றச்சாட்டுக்கள் நிகழ்வு – நிபுணத்துவ சாட்சியங்கள் ஊடாக நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்குத் தொடுநரால் நிரூபிக்கப்பட்டுள்ளதால் குற்றவாளி எனக் கண்டு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

“குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்படுகிறது. செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும். பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். வழங்கத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்” என்றும் மன்னார் மேல் நீதிமன்றம் தண்டனை தீர்ப்பளித்தது.வழக்குத் தொடுநர் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரச சட்ட வாதி செஸான் மஹ்பூம் வழக்கை நெறிப்படுத்தினார்.

தொடர்புடையசெய்திகள்

அஸ்வெசும திட்டத்தில் அதிரடி மாற்றம்; 13 இலட்சத்திற்கும் அதிகமானோர் நீக்கம்!
செய்திகள்

அஸ்வெசும திட்டத்தில் அதிரடி மாற்றம்; 13 இலட்சத்திற்கும் அதிகமானோர் நீக்கம்!

October 29, 2026
இன்றைய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

இன்றைய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

October 29, 2026
பறவை மோதியதால் லண்டன் நோக்கிப் புறப்பட்ட விமானம் அவசரத் தரையிறக்கம்!
செய்திகள்

பறவை மோதியதால் லண்டன் நோக்கிப் புறப்பட்ட விமானம் அவசரத் தரையிறக்கம்!

October 28, 2026
தேசிய இளைஞர் சேவை மன்ற முன்னாள் தலைவர் பிணையில் விடுவிப்பு!
செய்திகள்

தேசிய இளைஞர் சேவை மன்ற முன்னாள் தலைவர் பிணையில் விடுவிப்பு!

October 28, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!

October 28, 2026
ஹோமாகம பொலிஸ் காவலில் இளைஞர் உயிரிழந்த சம்பவம்; குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது!
செய்திகள்

ஹோமாகம பொலிஸ் காவலில் இளைஞர் உயிரிழந்த சம்பவம்; குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது!

October 28, 2026
Next Post
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்கள் கட்சி தலைமையகத்துக்கு அழைப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்கள் கட்சி தலைமையகத்துக்கு அழைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு