Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அஸ்வெசும திட்டத்தில் அதிரடி மாற்றம்; 13 இலட்சத்திற்கும் அதிகமானோர் நீக்கம்!

அஸ்வெசும திட்டத்தில் அதிரடி மாற்றம்; 13 இலட்சத்திற்கும் அதிகமானோர் நீக்கம்!

55 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நலன்புரி நன்மைகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘அஸ்வெசும’ பயனாளிகளைத் தெரிவு செய்யும் திட்டத்தின் புதிய நடைமுறையின் கீழ் 1,391,830 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

2025.12.15 ஆம் திகதியிட்ட 2497/03 ஆம் இலக்க அரசாங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் இனிவரும் காலங்களில் ‘தீவிர வறுமைக்கோடு’ (Extreme Poor) மற்றும் ‘வறுமைக்கோடு’ (Poor) ஆகிய இரு பிரிவுகளுக்கு மட்டுமே கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

இதற்கமைய, தகவல்கள் புதுப்பிக்கப்பட்டதன் பின்னர், மாதாந்தம் 17,500 ரூபாய் கொடுப்பனவு உரித்தாகும் ‘தீவிர வறுமைக்கோடு’ பிரிவின் கீழ் 363,142 பயனாளிகளும், மாதாந்தம் 10,000 ரூபாய் கொடுப்பனவு உரித்தாகும் ‘வறுமைக்கோடு’ பிரிவின் கீழ் 628,658 பயனாளிகளுமாக முதலாவது பட்டியலின் கீழ் மொத்தமாக 991,800 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படவுள்ள இரண்டாவது பெயர் பட்டியலில் 740,127 குடும்பங்கள் மட்டுமே தெரிவு செய்யப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

தற்போது தகுதி பெற்றுள்ள பயனாளிகளின் பெயர் பட்டியல் அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களின் அறிவித்தல் பலகைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பட்டியல் தொடர்பில் ஏதேனும் மேன்முறையீடுகள் அல்லது ஆட்சேபனைகள் இருப்பின், இன்று (29) முதல் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை அதனைச் சமர்ப்பிப்பதற்கு மக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தகவல்களைப் புதுப்பிக்கும் செயல்முறை நிறைவடைந்த பின்னர், தகுதிபெறும் புதிய பயனாளிகளின் இரண்டாவது பெயர் பட்டியலை எதிர்வரும் டிசம்பர் மாதம் வெளியிட நலன்புரி நன்மைகள் சபை எதிர்பார்த்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இன்றைய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

இன்றைய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

October 29, 2026
பறவை மோதியதால் லண்டன் நோக்கிப் புறப்பட்ட விமானம் அவசரத் தரையிறக்கம்!
செய்திகள்

பறவை மோதியதால் லண்டன் நோக்கிப் புறப்பட்ட விமானம் அவசரத் தரையிறக்கம்!

October 28, 2026
தேசிய இளைஞர் சேவை மன்ற முன்னாள் தலைவர் பிணையில் விடுவிப்பு!
செய்திகள்

தேசிய இளைஞர் சேவை மன்ற முன்னாள் தலைவர் பிணையில் விடுவிப்பு!

October 28, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!

October 28, 2026
ஹோமாகம பொலிஸ் காவலில் இளைஞர் உயிரிழந்த சம்பவம்; குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது!
செய்திகள்

ஹோமாகம பொலிஸ் காவலில் இளைஞர் உயிரிழந்த சம்பவம்; குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது!

October 28, 2026
ஈரான் போருக்காக 47 பில்லியன் டொலர்களுக்கு மேல் செலவிட்ட அமெரிக்கா!
உலக செய்திகள்

ஈரான் போருக்காக 47 பில்லியன் டொலர்களுக்கு மேல் செலவிட்ட அமெரிக்கா!

October 28, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு