Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா பதவி விலக முடிவு

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா பதவி விலக முடிவு

3 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தின் இறுதி சூப்பர் எட்டு போட்டியில் பாகிஸ்தானிடம் இலங்கை அணி ஐந்து ஓட்டங்கள்வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

தோல்விக்குப் பின்னர் இந்த அறிவிப்பு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரரிடமிருந்து உத்தியோகப்பூர்வமாக வந்தது.

போட்டியின் இணை நடத்துனராகவிருந்த இலங்கை அணி ஏற்கனவே அரையிறுதிப் போட்டியிலிருந்து வெளியேறிய நிலையில் தங்களது 2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணப் பயணத்தை வெற்றியுடன் நிறைவுக்கு கொண்டுவரத் தவறியது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியுடனான நேற்றைய தோல்வியின் பின்னர் தனது தீர்மானத்தை அறிவித்த சனத் ஜெயசூர்யா, இந்த முடிவு சிறிது காலமாகவே தனது மனதில் இருந்து வந்ததாகவும், இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து தொடரின் போது நீண்ட காலத்திற்கு தனது பதவியில் தொடர விரும்பவில்லை என்று குறிப்பிட்டதாகவும் கூறினார்.

அது குறித்து மேலும் கூறிய அவர், அந்தப் பட்டத்தை (தலைமைப் பயிற்சியாளர்) வேறு ஒருவருக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

அதனால்தான் இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து தொடரின் போது நான் இந்த பதவியை தொடரும் திட்டம் இல்லை என்று குறிப்பிட்டேன்.எனவே, அந்த முடிவை எடுத்த பிறகு அதைச் சொன்னேன்.

உலகக் கிண்ணத்துக்குப் பிறகு, நான் நல்ல மனநிலையில் இங்கிருந்து பயிற்சியாளராக வெளியேற முடியும் என்று நினைத்தேன்.

நான் நினைத்த அளவுக்கு அதைச் செய்ய முடியவில்லை. அதைப் பற்றி நான் வருந்துகிறேன். எனது ஒப்பந்தம் எதிர்வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.

எனினும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் எனது தீர்மானம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதையும் தெரிவிக்கவில்லை.

நான் அவர்களுடன் சென்று விவாதிக்க வேண்டும். நான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பேச வேண்டும் – என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்
செய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

June 7, 2026
சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
Next Post
தேசிய மக்கள் சக்தியின் நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும்

தேசிய மக்கள் சக்தியின் நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு