யாழ் நகர மத்தியில் அமைந்துள்ள தனியார் பஸ் நிலைய பகுதியில் மீட்கப்பட்ட கரு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ் . நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
யாழ் நகர மத்திய பகுதியிலிருந்து கருச் சிதைவொன்று நேற்று (28) மீட்கப்பட்டிருந்தது.
அதற்கு முன்னர் யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியுள்ளார்.

அதன் பின்னரே ஆறு அல்லது ஏழு மாதங்களான கரு மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகைதந்த யாழ்.நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார், கண்காணிப்பு கருவிகளின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கருச்சிதைவை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.








