நாடு முழுவதும் அமைதி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளது அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்.
இன்று (12.09.2023) பிற்பகல் 12.00 மணி தொடக்கம் 2.00 மணி வரை ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகிறது என மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
குறித்த போராட்டம் காரணமாக இன்று பிற்பகல் வைத்தியசாலைகள் செயற்பாடுகள் சிறிதளவு பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் போராட்டங்கள் நடைபெறும் இடங்கள் தொடர்பிலும் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த இடங்கள் வருமாறு, காலி மாவட்டம் – கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு முன்னால்
மாத்தறை மாவட்டம் – மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னால்
ஹம்பாந்தோட்டை மாவட்டம் – தங்காலை பேருந்து நிலையத்திற்கு முன்னால்
நுவரெலியா மாவட்டம் – நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னால்
பதுளை மாவட்டம் – பதுளை மாகாண பொது வைத்தியசாலைக்கு முன்னால்
அம்பாறை மாவட்டம் – அம்பாறை வைத்தியசாலைக்கு முன்னால்
அம்பாறை மாவட்டம் – தெஹி அட்டகண்டிய ஆதார வைத்தியசாலைக்கு முன்னால்
கல்முனை பிரதேசம் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக
திருகோணமலை மாவட்டம் – கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு முன்னால்
புத்தளம் மாவட்டம் – ஹலவத்தை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னால்
கேகாலை மாவட்டம் – கேகாலை பொது வைத்தியசாலைக்கு முன்னால்
ரத்னபுர மாவட்டம் – இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு முன்னால்
அநுராதபுரம் மாவட்டம் – அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால்
மன்னாரம் மாவட்டம் – மன்னார் மாவட்ட மருத்துவமனை முன்னால்
முல்லைத்தீவு மாவட்டம் – முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனை முன்னால்
வவுனியா மாவட்டம் – வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னால்
கிளிநொச்சி மாவட்டம் – கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு முன்னால்
அதேசமயம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இப்போராட்டம் நடைபெறவில்லை என தெரியவருகிறது.