செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் நாட்டின் கடல் எல்லைக்குள் நுழையும் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பிரான்ஸ் அரசாங்கத்திற்கும் இலங்கை கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபைக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக் கடற்கரைக்கு வரும் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியிருந்தன, இது இலங்கையின் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்பை கடுமையாக பாதித்தது.
இதனையடுத்து, இந்த நிலைமைகளை கண்காணிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு, அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது.