Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேலுக்கு இனி ஆயுதங்களை வழங்க முடியாது; அமெரிக்க செனட்டர் முடிவு

இஸ்ரேலுக்கு இனி ஆயுதங்களை வழங்க முடியாது; அமெரிக்க செனட்டர் முடிவு

7 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரான் மீதான போருக்காகவும், ஆயுத இருப்பை நிரப்பவும் பென்டகன் கோரிய 200 பில்லியன் டொலர் மேலதிக நிதியை அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் பீட்டர் வெல்ச் (Peter Welch) வெளிப்படையாக நிராகரித்துள்ளார்.

“முடிவில்லாத போர்களுக்கு (Forever War) துணை போக முடியாது” எனத் தெரிவித்த அவர், முறையான விவாதங்கள் இன்றி இந்தப் போருக்கு நிதி வழங்குவது அரசியலமைப்புக்கு முரணானது எனச் சாடியுள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் இந்த நிதி கோரிக்கைக்கு ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்பிலிருந்தும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதேவேளை, இஸ்ரேலுக்கு 660 மில்லியன் டொலர் பெறுமதியான சுமார் 20,000 பாரிய குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை அனுப்புவதைத் தடுக்கும் தீர்மானத்திற்கும் செனட்டர் வெல்ச் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வழங்கப்பட்ட அமெரிக்கக் குண்டுகளைக் கொண்டு இஸ்ரேல் ஈரானில் ஒரு “முழுமையான போரை” (Total War) நடத்தி வருவதாகவும், மேலதிகமாக ஆயுதங்களை வழங்க அனுமதிக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் (Bernie Sanders) முன்மொழிந்த இந்தத் தீர்மானங்களுக்குப் பல டெமாக்ரட் செனட்டர்கள் ஆதரவளித்துள்ளனர்.

“கெட்டவர்களை ஒழிக்கப் பணம் தேவை” எனப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் (Pete Hegseth) வாதிட்ட போதிலும், நிதி வழங்குவதற்கு முன்னதாகப் பொது விசாரணை நடத்தப்பட வேண்டும் என ரிபப்ளிகன் செனட்டர் ஜான் கென்னடி வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் போரினால் அமெரிக்கப் பொருளாதாரம் சீர்குலைந்து வருவதாகவும், நாட்டின் பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசத்தின் தாக்கம் இன்றும்; 75 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசத்தின் தாக்கம் இன்றும்; 75 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்!

October 23, 2026
விலங்குகளுக்கு மட்டும் பரவக்கூடிய ஷமொண்டா வைரஸ் மனிதனிடம் கண்டுபிடிப்பு; பிரான்ஸில் ஒருவர் உயிரிழப்பு!
உலக செய்திகள்

விலங்குகளுக்கு மட்டும் பரவக்கூடிய ஷமொண்டா வைரஸ் மனிதனிடம் கண்டுபிடிப்பு; பிரான்ஸில் ஒருவர் உயிரிழப்பு!

October 22, 2026
இளம் பெண் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு; NPP உறுப்பினர் கைது!
செய்திகள்

இளம் பெண் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு; NPP உறுப்பினர் கைது!

October 22, 2026
ஏறாவூர் வைத்திய அத்தியட்சகரின் கருத்துக்கு ஹரீஸ் எம்.பி. கடும் கண்டனம்; உடனடியாக இடமாற்றவும் கோரிக்கை
செய்திகள்

ஏறாவூர் வைத்திய அத்தியட்சகரின் கருத்துக்கு ஹரீஸ் எம்.பி. கடும் கண்டனம்; உடனடியாக இடமாற்றவும் கோரிக்கை

October 22, 2026
தெதுறு ஓயாவின் நீர்மட்டம் உயர்வு; வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

தெதுறு ஓயாவின் நீர்மட்டம் உயர்வு; வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை!

October 22, 2026
தந்தையைக் கொலை செய்த மகனுக்கு மரண தண்டனை; திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

தந்தையைக் கொலை செய்த மகனுக்கு மரண தண்டனை; திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

October 22, 2026
Next Post
ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியர்களை அழைக்க முடியாது; பிரதமரின் சந்திப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களின் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியர்களை அழைக்க முடியாது; பிரதமரின் சந்திப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களின் விளக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு