Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அக்கரைப்பற்றில் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி இலஞ்ச ஊழல் பிரிவால் கைது

அக்கரைப்பற்றில் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி இலஞ்ச ஊழல் பிரிவால் கைது

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற ஒரு விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய நபரிடமிருந்து ரூ.4,000 இலஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டில், போக்குவரத்து பொலிஸ் சாஜன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போக்குவரத்து பொலிஸ் சாஜன் ஒருவரே இவ்வாறு நேற்றையதினம் (26) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பான நடவடிக்கைகளை முடித்து தருவதாக கூறி, அந்த நபரிடமிருந்து ரூ.4,000 இலஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர், கொழும்பில் உள்ள இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில், அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதலின்படி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை முன்பாக இலஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து பொலிஸ் சாஜன், இலஞ்சத் தொகையை பெற்றுக் கொண்டபோது, அங்கு மறைந்து இருந்த அதிகாரிகள் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை
செய்திகள்

பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை

September 8, 2026
முதலாம் தர சிறுவனுக்கு எமனான பாலத்திற்கு தோண்டப்பட்ட குழி; மேற்பார்வையாளருக்கு மட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
செய்திகள்

முதலாம் தர சிறுவனுக்கு எமனான பாலத்திற்கு தோண்டப்பட்ட குழி; மேற்பார்வையாளருக்கு மட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

September 8, 2026
விளக்கமறியலில் இருந்தே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ; அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டு
செய்திகள்

விளக்கமறியலில் இருந்தே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ; அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டு

September 8, 2026
மட்டக்களப்பு முன்னாள், இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை தீவிரம்
அரசியல்

மட்டக்களப்பு முன்னாள், இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை தீவிரம்

September 8, 2026
அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு

September 8, 2026
முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல்; பெண் கைது!
செய்திகள்

முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல்; பெண் கைது!

September 8, 2026
Next Post
ஈரான் மீதான தாக்குதல்களை மேலும் 10 நாள்களுக்கு ஒத்திவைத்த ட்ரம்ப்

ஈரான் மீதான தாக்குதல்களை மேலும் 10 நாள்களுக்கு ஒத்திவைத்த ட்ரம்ப்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு