Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வட கிழக்கு ஆழ்கடலில் போதைப்பொருளுடன் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் படகை கைப்பற்றிய கடற்படை

வட கிழக்கு ஆழ்கடலில் போதைப்பொருளுடன் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் படகை கைப்பற்றிய கடற்படை

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வட கிழக்கு ஆழ்கடலில் போதைப்பொருளுடன் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் ஆழ்கடல் மீன்பிடி படகொன்று கடற்படையினர் முன்னெடுத்திருந்த விசேட நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளது.

மேற்படி ஆழ்கடலில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கரைக்கு அழைத்து வரப்படுவதாகவும் கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கைக்குச் சொந்தமான மேற்படி ஆழ்கடல் மீன்பிடி படகு நாட்டின் வட கிழக்கு கடற்பரப்புக்கு அப்பால் ஆழ்கடலில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டது. புலனாய்வுப்பிரிவு வழங்கியிருந்த தகவலுக்கமைய கடற்படையின் நீண்ட தூர கப்பல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து ஆழ்கடலில் வைத்து, சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகை கைது செய்திருந்தனர்.

கடற்படையினரின் இந்த தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த மீன்பிடி படகில் பயணித்த சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகில் போதைப்பொருள் அடங்கியது என சந்தேகிக்கப்படும் பொதிகளும் மீட்கப்பட்டுள்ளன. எவ்வாறெனினும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட படகு மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்துக்கு புதன்கிழமை (1) அழைத்து வரப்பட உள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

July 25, 2026
நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி
செய்திகள்

நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி

July 25, 2026
வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்
செய்திகள்

வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்

July 25, 2026
தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்
செய்திகள்

தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்

July 25, 2026
ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை
செய்திகள்

ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை

July 25, 2026
சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு
செய்திகள்

சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு

July 25, 2026
Next Post
அப்பிள், மைக்ரோசொப்ட் நிறுவனங்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அப்பிள், மைக்ரோசொப்ட் நிறுவனங்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு